நோர்வே தமிழ் விளையாட்டுப் போட்டிகளை மேலும் மெருகூட்டுவதற்கான தளம்

நோர்வே தமிழ் விளையாட்டுப் போட்டிகளை மேலும் மெருகூட்டுவதற்கான தளம் . ஊக்கம் தரும் ஆக்கங்களை,சாதனைகளை எழுதுங்கள்
Pathmanhypno@gmail.com

விளையாட்டு

Norway tamil sport

fredag 18. juni 2010

விளையாட்டுக்களம், கொலைக்களம்,பிரமுகர் காட்சி

விளையாட்டுக்களம், கொலைக்களம்,பிரமுகர் காட்சி

நோர்வேயில் நடைபெறும் விளையாட்டு விளாக்கள்- போட்டிகள் நடாத்தப் படுவது மனதுக்கும் உடலுக்கும் உறுதியைக் கொடுப்பதற்கும் சமூக ஒன்றுகூடலுக்குமாகும்.வளர்ந்த பிள்ளைகள் வெற்றி தோல்வியை ஏறுக்கொள்ளப் பழகுவதற்கும், சிறியோருக்கு விளியாட்டுக்களில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்குமான நிகழ்சியாகவே நோர்வேயில் நோர்வேயிய மக்களுக்கு நடாத்தப் படுகிறது.
இதில் குறிப்பாக வயது குறைந்தவர்களில் எல்லோருக்கும் பரிசு வழங்குவது சிறப்பு.

வயது எல்லை பிரிக்கும் பொழுது கூட 17 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு ஒரு வயது வித்தியாசத்திலும், 18 தொடக்கம் 22 வயதிற்கு 18 - 19 , 20 - 22 வயதுக் குழுவும் பிரிக்கின்றார்கள்.பெரியோர்கள் வயதுப்(senior) பிரிவில் யாரும் பங்கு பற்றலாம் .இது 23-தொடக்கம் 35 வரை இருக்க வேண்டியது இல்லை. இந்த வயதுப் பிரிவில் யாரும் பங்கு பற்றலாம்.

அடுத்தது 35 வயதிற்கு மேற்பட்ட பிரிவுகள்(veteran) . இது 35 இலிருந்து 5 வயது பிரிவாகப் பிரிப்பார்கள். 35 - 39, 40 - 44,45 - 49,50 - 54... இப்படியே 80 வயது வரை பிரிப்பார்கள்.இது சர்வதேச விதிகளுக்கமையவே நடை பெறுகிறது.

இதில் அஞ்சலோட்டத்திற்கு 35 - 40 வரை ஒரு தனிக் குழுவாக இருக்கும்.மற்றவை 40 - 49 . 50 - 59 வரை இருக்கும். 35 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் வயது கூடியோர் குறைந்த வயதிற்கு அஞ்சலோட்டம் ஓடலாம். அதேபோல் 35 வயதிற்கு உட்ட்பட்டவர்களுக்கு குறைந்த வயதுடையோர் கூடிய வயதுக்கு ஓடலாம்.

35 வயதிற்கு உட்ட்பட்டவர்கள் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விளையாட்டுக்களில் பங்கு பற்ற முடியாது.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றுபவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு தமது வரவை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த ஒரு மணித்தியாலத்தை அவர்கள் தங்களின் உடலை வெப்பமேற்றி (warm up-stretch out)போட்டிக்கு தயாராகிறார்கள். சரியான நேரத்தில் வெளி உடையை மாற்றி உடல் குளிராவதற்கு முன் விளையாட்டில் பங்கு பற்றுகிறார்கள். விளையாட்டு முடிந்தபின் தங்கள் உடலைப் படிப்படியாக சாதாரண நிலைக்கு கொண்டு வருகிறார்கள்(stretch out).

கொலைக்களம்
குறிப்பாக மாவீரர் வீளையாட்டு விழா தமிழ்ச்சங்க விழையாட்டு விழா என்பன நோர்வேயிய சர்வதேச விதிகளுக்கு அப்பாலே சட்டவிரோதமாக நடைபேறுகிறது. வயது பிரித்தல், பரிசு வழங்கல்,சரியான நேரத்திற்கு ஆரம்பித்தல் என்பன சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக நடை பெறுகிறது.

. இவர்கள் நடாத்தும் விளையாட்டு விதிகள் 25 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் சில கிராமிய பாடசாலைகள் நடாத்திய விதிகளாகும்.குறிப்பாக ஒருவர் மூன்று விளையாடுக்களில் மாத்திரம் தான் பங்கு பற்ரலாம் என்பது மிகவும் பழைய காலத்து முறையாகும்.சிறுவர்களை 2 வயது வித்தியாசத்தில் பிரித்தல் என்பது போன்ற பல விடயங்கள்.

நோர்வேயிற்கு முதல் வந்த பெருமளவு தமிழர்களின் வயது 50 ஐத் தாண்டி விட்டது. இப்பொழுது பலரும் உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டுகிறார்கள்.ஆனால் முதல் பரம்பரைத் தமிழருக்கு வயது பிரிக்கவில்லை. ஒரு 52 வயது உடையவர் தற்போதைய நிலையின் படி 40 வயதுடையவருடனேயே விழையாட்டில் பங்கு பற்ற வேண்டும்.

இப்படியாக 40 வயதிற்குக் கிட்டியவர்கள் இவர்களது முறையில்(warm up இல்லாது ) ஓடப் போனால் உயிராபத்து ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளது. சிறுவர்களுக்குக் கூட warm up பண்ணுவதற்கு நேரம் அறிவிக்கவிட்டால் அவர்களுக்கு வரும் கால் பிடிப்புக்கள் - அவர்களுக்கு விளையாட்டில் வெறுப்பை ஏற்படுத்தும்.நிரந்தரமன உடல் உபாதைகளுக்கும் உள்ளாகலாம்.இபாடியக சரியான நேரத்துக்கு ஆரம்பிக்காத விளையாட்ட்டுக் களம் கொலைக்களத்திற்கு சமமாகும்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை கொலைக் களத்தில் இருந்து பாதுகாருங்கள்.

பிள்ளைகளே உஙகள் பேற்றொரை விளையாட்டுக்களில் பங்கு பற்ற விடாதீர்கள்..கொலைக் களத்திற்கு அனுப்பாதீர்கள்.

பிரமுகர் காட்சி

இந்த விளையாட்டுப் போட்டிகளிற்கு மருத்துவரிலிருந்து,தாதி, இதய நோய் நிபுணர்கள் எல்லோரும் வந்து இருக்கிறார்கள். எல்லோரும் பாராட்டி விட்டே சென்று இருக்கிறார்கள்.எப்படி இதில் நான் குறை கூறலாம் என்று நீங்கள் கூறுவது எனக்குக் கேட்கின்றது.

ஆனால் அந்தப் பிரமுகரகளுக்கு எல்லாம் இவை பிழையெனெத் தெரிந்தாலும் அவர்கள் கூறினால் அவரகள் பிரமுகராகும் சந்தர்ப்பத்தை இழப்பார்கள்.அவர்கள் அந்த பிரமுகராக முன்னுக்கு நிற்கும் பொழுது ஏற்படும் சில நிமிட சந்தோசத்தை இழக்க விரும்பவில்லை.அதலால் எற்படும் சுய இலாபங்களையும் இழக்க விரும்பவில்லை.

ஆகையால் அந்தப் படித்த பிரமுகர்கள் எல்லோரும் தம்மை பிரமுகராகக் காட்டுவதற்கே முன் நிற்பார்கள். உண்மையைக் கூற மாட்டார்கள்.குறை கூற மாட்டார்கள்.

இதற்கு எமது அரசியல் வரலாற்றில் பல உதாரணம் இருந்தாலும் அவை கூறும் நேரம் இதுவல்ல.

உதாரணமாக முதலாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் சாளரம் என்ற நாங்கள் பாவிக்காத சொல்லு தேவையில்லை என்பது பல தமிழாசிரியர்களுக்குத் தெரிந்தாலும் - அவர்கள் அவற்றை கூறினால் அவர்களது பிரமுக அந்தஸ்து இல்லாது போய்விடும். அவர்கள் பிழையெனக் கூற மாடார்கள். அவர்கள் வேண்டுமானால் சாளரம் என்ற தமிழ் சொல்லில் இருந்து தான் Window என்ற ஆங்கிலச் சொல்லு வந்தது என்று மொட்டந்தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போடுவார்கள்.

தேவையில்லாத விவாதம்.

இவர்கள் மாவீரர் பெயரில் காசு சேர்பதற்காகவே விளையாட்டுப் போட்டி வைக்கிறார்கள். முட்கம்பி இல்லாத படியால் எல்லோரும் எப்பொழுது அங்கு நிற்க வேண்டும் என்று நேரத்தை அறிவியாது அதை முட்கம்பி வேலியாகப் பாவித்து சாப்பாடு விற்கிறார்கள். பணம் சேகரிப்பது தான் முழு நோக்கம்

புலிகளை விமர்சிக்கத் தேவயில்லை அவர்களின் பிழையான அரசியலால் அவர்கள் தாங்களே அழிவார்கள்.என்று சிலர் கூறுவது விழங்குகிறது. ஆனால் அவர்கள் அழியும் பொழுது எத்தனை பேரை அழித்துச் செல்வார்கள் என்ற பயத்தில் தான் இக்கட்டுரையை எழுதினேன்.

இக்கட்டுரைக்கு உதவியவை
இந்த விவாதம் ஏற்கனவே மின் அஞ்சலில் வந்தது. அதில் கூறிய சிலரது கருத்துக்கள்.
Hei
Dette er en bra skrevet noe som jeg lov å si.
1.Barne idrett alle under 11 år alle for deltakelse premie
http://www.friidrett.no/barnogungdom/ungdom/Documents/Håndbok_trykk.pdf
http://www.friidrett.no/barnogungdom/Documents/Barneidrettsbestemmelsene.pdf
http://www.friidrett.no/barnogungdom/Sider/forside.aspx
2.Warmup :Oppvarming 20-25 min er helt ok
Det er ikke tillatt å varme opp på lengere tid i (1-2 min i banen) banen. (på baksiden av tribunen eller andre sted kan man varme opp 20-25 min for løp start).
http://www.osi.uio.no/friidrett/trprog/tren0210.pdf
3. Tidsskjema og startlister :
Må ha et tid skjeme for øvelser(tamiler føler ikke tiden engang)
http://www.tyrving.idrett.no/ezp/index.php/article/articleview/3238/1/9/
Hvis jeg skrevet noe feil I am so soory about that.
mvh
Ra---
ஏற்கனவே ஒருவருடத்தின் முன்பு விட்ட வேண்டுகோள்.
ஒவ்வொரு விளையாட்டும் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கவேண்டும்-Oslo Tamil sommer sport
http://nortamilsport.blogspot.com/
கடந்த வருடத்தில் நோர்வேயிய விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றியமை.
http://nortamilsport.blogspot.com/2010/01/bilder-fra-nm-2009-gull-medalje.html
இப்படிக்கு
நட்புடன்
ந.பத்மநாதன்

tirsdag 19. januar 2010

ஒவ்வொரு விளையாட்டும் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கவேண்டும்-Oslo Tamil sommer sport

முதலில் தங்களது பொன்னான நேரங்களை செலவளித்து , விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் , ஒழுங்கமைப்பாளர்கள் , மருத்துவக்க்குழு , நடுவர்கள் , உணவுக்குழு போன்றோரிற்கு நன்றிகள் பல. பங்கு பற்றும பார்வையாளர்கள், விளையாட்டாளர்களுக்கும் நன்றிகள். விளையாட்டுப் போட்டியை மேலும் மெருகூட்டுவதற்கு குறித்த நேரத்தில் ஒவ்வொரு விளையாட்டும் ஆரம்பிக்க வேண்டும் .அதற்கான காரணங்கள் கீளே
  1. விளையாட்டுக்கள் ஆரம்பிப்பதற்கு நேர அட்டவணை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். - Norway மக்களுக்கு  நடைபெறுவதுபோல் .
  2. Warmup பண்ணுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவை. இது 15 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்கள் வரை அமையும். Warmup பண்ணினாலே விளையாட்டு வீரர் முழுத்திறனையும் காட்டலாம். கைகால்கள் பிடிப்பு வராது .
  3. வெளியிடங்களில் இருந்து பலரும் பங்கு பற்ற விரும்புகிறார்கள் . அவ்ர்கள் 2 - 3 மணி நேரம் பயணம் செய்து , இருநாட்களை முற்று முழுதாக செலவ்ளிக்க முடியாது. சரியான நேரம் தெரிந்தால் பங்கு பற்ற மிகவும் வசதியாக் இருக்கும்
  4. அஞ்சலோட்டம் . 3000 மீ , 1500 மீ போன்ற , 100 மீ போன்ற பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் நிகழ்ச்சிகளை - முன்கூட்டியே நேரத்தை அறிவிப்பதால் மேலும் பல பார்வையாளர்களை வரவழைக்கலாம்.
  5. சிறுவர்களை , மணித்தியாலக்கணக்காக வரிசையில் வைத்து கொடுமைப்படுத்துவதைத் தவிற்கலாம்
  6. சாப்பாடு விற்பதற்கும் நேர அட்டவணை தயாரித்தால் மேலும் மக்கள் விரும்பி வந்து சாப்பிடுவார்கள் . கூழ் , சுண்டல்கடலை , சோறு , கொத்துறொட்டி போன்றவற்றிற்கு நேரத்தை அறிவித்தால் - மேலும் விற்பனையை கூட்டலாம் .மக்களுக்கு வசதியாக இருக்கும்.
  7. நீளம் பாய்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு , ஒரு தகுதி காண் நீளத்தை அறிவித்தல் வேண்டும் - உதரணமாக 14 வயதுச் சிறுவன் 3மீ75 செ.மீ பாய்ந்தாலே அவர் போட்டியில் பங்கு பற்றலாம். ஒஸ்லோவில் இருப்பவர்கள் ,முதற் கிளமை நடை பெறும் பயிற்சி நேரங்களில் , விளையாட்டுக் கழகங்களின் உதவியுடன் , தமது தகுதியை நிரூபிக்கலாம் . ஏனையோர் தமது கழகங்களின் ஊடாக தகுதியை நிரூபித்து வரலாம் .இதனால் பெரும் வரிசையைக் குறைக்கலாம் . சிறுவர்களின் நீண்ட காத்திருப்பு நேரம் - கடினம் குறையும்.
  8. விளையாட்டு தினத்தன்று ஒருவருக்கு வெளியில் 1 மணி நேர வேலை இருந்தால் அவர் விளையாட்டில் தற்போதைய நிலையில் பங்கு பற்ற முடியாது . நேரத்தை அறிவித்தால் அதற்கு ஏற்றவாறு வேலையை மாற்றி பங்கு பற்றலாம்.
 மேலும் ஆதரவான எதிரான காரணங்களை நீங்கள் எழுதுங்கள்

mandag 18. januar 2010

விளையாட்டுப் போட்டி

இங்கே அழுத்தவும்  Norway friidrett

http://www.friidrett.no/barnogungdom/ungdom/Documents/Håndbok_trykk.pdf


http://www.friidrett.no/barnogungdom/Documents/Barneidrettsbestemmelsene.pdf

http://www.friidrett.no/barnogungdom/Sider/forside.aspx
 
http://www.osi.uio.no/friidrett/trprog/tren0210.pdf
 
http://www.tyrving.idrett.no/ezp/index.php/article/articleview/3238/1/9/
 
மேலெ நீங்கள் அழுத்தினால் , எவ்வண்னம் நோர்வேயில் விளையாட்டுப் போட்டிகள் நடைபேறூம் என்பதை பார்க்கலாம